உழவர்சந்தை திறப்பு விழா
வேடசந்தூரில் உழவர்சந்தை திறப்பு விழா நடந்தது.
வேடசந்தூர் சந்தைபேட்டையில் 16 கடைகளுடன் புதிதாக உழவர்சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இந்த உழவர் சந்தையை தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து வேடசந்தூர் உழவர்சந்தையில் நடந்த விழாவில், மாவட்ட கலெக்டர் விசாகன், வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தனர். முதல் விற்பனையை எம்.எல்.ஏ. காந்திராஜன் தொடங்கி வைத்து பேசுகையில், உழவர்சந்தை திறந்ததற்கு, தொகுதி மக்களின் சார்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர்கள் இ.பெரியசாமி அர.சக்கரபாணி ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., சி.வே.கிருஷ்ணன், ஒன்றியக்குழு தலைவர் சவுடீஸ்வரி கோவிந்தன், மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதாபார்த்திபன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பூபதிமாரிமுத்து, வேடசந்தூர் பேரூராட்சி தலைவர் மேகலா கார்த்திகேயன், மாவட்ட கவுன்சிலர்கள் தாமரைச்செல்விமுருகன், தமிழ்ச்செல்வி ராமச்சந்திரன், எரியோடு பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமி கார்த்திகேயன், நகர தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ஜெகநாதன், நகர அவைத் தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் அரசு அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.