அரசின் நிதியை பெற விவசாயிகள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்


அரசின் நிதியை பெற விவசாயிகள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 21 Jun 2023 12:15 AM IST (Updated: 21 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அரசின் நிதியை பெற விவசாயிகள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்று கலெக்டர் தகவல் தொிவித்துள்ளாா்.

விழுப்புரம்

விழுப்புரம்:

பிரதம மந்திரியின் கிசான் சம்மன் யோஜனா மூலம் ரூ.2 ஆயிரம் நிதி உதவி, மத்திய அரசு வழிகாட்டுதலின்படி ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது மத்திய அரசு 14-வது தவணைத்தொகை விடுவிப்பதில் சில புதிய வழிமுறைகளை விதித்துள்ளது. அதன்படி ஜூலை மாதம் முதல் விடுவிக்கப்படும் அனைத்து தவணை தொகைகளும் பயனாளிகளின் ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே நிதி விடுவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதனால் பயனாளிகள், தபால் நிலையங்களிலும், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்திலும் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து மற்றும் ஆதார் கார்டில் முகவரி மாற்றம், செல்போன் எண் இணைத்தல் போன்ற அனைத்து பணிகளையும் செய்து தர உள்ளனர். எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆதார் எண்ணை பதிவு செய்து பயனடையலாம்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.


Next Story