மின்வாரிய அலுவலகத்தில் விவசாயிகள் மனு
சாத்தான்குளம் மின்வாரிய அலுவலகத்தில் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொத்தகாலன்விளை வடக்கு தெருவில் மின் அழுத்த குறைபாடு காரணமாக வீட்டில் உள்ள மின் சாதன பொருட்கள் பழுதடைந்து சேதமாவதாக அப்பகுதி மக்கள் மின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனாலும் இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து சாஸ்தாவிநல்லூர் விவசாயிகள் நலச்சங்க செயலர் லூர்துமணி தலைமையில் விவசாயிகள் சங்க செயற்குழு உறுப்பினர்கள் சந்தனதிரவியம், ஜெயக்குமார், துணை செயலர் ஜஸ்டின் ஜெயராஜ், உறுப்பினர்கள் பாண்டி, அந்தோணி சவரிமுத்து வெலிங்டன், செல்வன் உள்ளிட்டோர் சாத்தான்குளம் மின்வாரிய அலுவலகத்துக்கு மின் உதவி பொறியாளர் நாகராஜிடம் முறையிட்டு மனு அளித்தனர்.
மனுவை பெற்ற அவர், குறைபாடு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டு அதற்கான திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. அதன்பின் உடனடியாக மின் அழுத்த குறைபாடு நீக்கம் செய்து சீரான மின்சாரம் வழங்கப்படும் என உறுதி அளித்தார். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.