கலெக்டருக்கு விவசாயி கோரிக்கை மனுவால் பரபரப்பு


கலெக்டருக்கு விவசாயி கோரிக்கை மனுவால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 May 2023 12:15 AM IST (Updated: 1 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விவசாயி மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு கொடுத்த நிகழ்ச்சி தென்காசி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி

தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா நெற்கட்டும் செவல் கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் என்ற விவசாயி தென்காசி மாவட்ட கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

நான் 4 ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்து வருகிறேன். எங்கள் பகுதியில் பிப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை கோடைகால பருவத்திலும், செப்டெம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை மழைக்காலத்திலும் பயிர் செய்து வருகிறோம். இந்தப் பருவத்தில் பயிரின் வயதுக்கு ஏற்ப 50 நாட்கள் களை எடுக்கும் பணி நடைபெறுவது வழக்கம். தற்போது மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் 100 நாட்கள் வேலைக்கு ஆட்கள் செல்வதால் எங்களுக்கு களை எடுக்க ஆள் கிடைக்கவில்லை. இதனால் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். எனவே மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உபரி ஆட்கள் இருந்தால் அவர்களை களை எடுக்கும் பணிக்கு அனுப்பி வைக்க கேட்டுக்கொள்கிறோம். அவர்களுக்கு தேவையான கூலி, பயண செலவு உள்ளிட்டவற்றை நாங்கள் வழங்க தயாராக இருக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பணியாளர்களை களை எடுக்க அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விவசாயி மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு கொடுத்த நிகழ்ச்சி தென்காசி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story