Normal
பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
பாசன வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாததை கண்டித்து பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்
திருத்துறைப்பூண்டி:-
பாசன வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாததை கண்டித்தும், தூர்வாரும் பணியை பாதியில் நிறுத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்தும், திருத்துறைப்பூண்டி- நாகை சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சந்திரராமன், ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் ராஜா, விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் ஜோசப், ஒன்றிய தலைவர் பாலு, இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
Related Tags :
Next Story