இடுபொருட்கள் வழங்குவதில் முறைகேடு நடந்ததாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
இடுபொருட்கள் வழங்குவதில் முறைகேடு நடந்ததாகக்கூறி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த நந்திமங்கலம் கிராமத்தில் விவசாயிகளுக்கு கூட்டுப் பண்ணை மூலமாக குறைந்த விலையில் உரங்கள் மற்றும் விவசாய இடுப்பொருட்கள் வாங்கித் தருவதாக ஆதார் அட்டை, விவசாய நிலத்தின் பட்டா மற்றும் அடங்கல் ஆகியவற்றை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் வாங்கி விவசாயிகளுக்கே தெரியாமல் கையெழுத்திட்டு வேளாண் இடு பொருட்களை பெற்று மோசடி நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதை அறிந்த விவசாயிகள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஒன்று கூடி அதிகாரிகளை கண்டித்தும், தனிநபர் செயல்பாட்டை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக கூட்டுப் பண்ணை குழு மூலமாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய முறையான சலுகைகளை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
Related Tags :
Next Story