குறுவை பயிர்க்காப்பீடு செய்ய அனுமதிக்காததை கண்டித்து திருவாரூரில் விவசாயிகள் போராட்டம்


குறுவை பயிர்க்காப்பீடு செய்ய அனுமதிக்காததை கண்டித்து திருவாரூரில் விவசாயிகள் போராட்டம்
x

குறுவை பயிர்க்காப்பீடு செய்ய அனுமதி வழங்கப்படாததை கண்டித்து திருவாரூரில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர்

குறுவை பயிர்க்காப்பீடு செய்ய அனுமதி வழங்கப்படாததை கண்டித்து திருவாரூரில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா, வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் முருகவேல், வேளாண்மை இணை இயக்குனர் ரவீந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஹேமா ஹெப்சிபா நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டம்

கூட்டத்தில் தமிழகத்தில் 2-வது ஆண்டாக குறுவை பயிரை காப்பீடு செய்ய முடியாத நிலை உள்ளது. குறுவை காப்பீடு செய்ய இன்சூரன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்யாமலும், எந்த அறிவிப்பும் வெளியிடாமல் தமிழக அரசு உள்ளது. பயிர்க்காப்பீட்டை மாநில அரசு ஏற்று நடத்த வேண்டும். பருவம் தவறிய மழையினால் குறுவை பயிர்கள் பாதிப்புக்கு உரிய இழப்பீடு அரசு ஏற்று வழங்க வேண்டும் என வலியுறுத்திய விவசாயிகள், குறுவை பயிர்க்காப்பீடு செய்ய அனுமதி வழங்கப்படாததை கண்டித்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தம்புசாமி, சேதுராமன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறுகையில், 'திருவாரூர் மாவட்டத்தில குறுவை பருவத்தில் 33,605 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு முறையிலும், 79,128 ஏக்கரில் செம்மை நெல் சாகுபடி முறையிலும், 23,355 ஏக்கரில் சாதாரண நெல் நடவு முறையிலும், 79,128 ஏக்கரில் செம்மை நெல் சாகுபடி முறையிலும், 23,355 ஏக்கரில் சாதாரண நெல் நடவு முறையிலும் ஆக மொத்தம் 1,36,088 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தடையின்றி...

மேலும் 28,912 ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும் எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளுக்கு தேவையான உரங்கள், இடு பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.


Next Story