வேளாண்துறை அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கலசபாக்கத்தில் வேளாண்துறை அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ெசய்தனர்.
திருவண்ணாமலை
கலசபாக்கம்
கலசபாக்கத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. இதில் விவசாயிகள் மத்திய அரசு வழங்கும் விவசாய நிதி உதவித்தொகை இடையில் நின்று விட்டது
இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் கேட்டனர். அதற்கு வேளாண்துறை அதிகாரிகள் முறையாக பதில் அளிக்காமல், கேள்வி கேட்ட விவசாயியை வெளியே போ, உனக்கு பதில் கூற முடியாது என்று கூறியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் வேளாண்மை துறை அதிகாரிகளை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வேளாண்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story