மணல் குவாரி அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு


மணல் குவாரி அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
x

ஏனாதிமங்கலத்தில் மணல் குவாரி அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கலிவரதன் தலைமையில் விவசாயிகள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலம் கிராமத்தில் மணல் குவாரி அமைக்க முற்படுவதை மாவட்ட நிர்வாகம் தடை செய்ய வேண்டும். ஏனெனில் இதற்கு முன்பு மணல் குவாரி அமைத்ததால் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளது. எனவே மணல் குவாரியை அந்த பகுதியில் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும். 50-க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் நிரம்பவும், குடிநீர் ஆதாரம் கிடைக்கவும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும் வழிவகுக்கும் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு, தளவானூர் அணைக்கட்டு, சொர்ணாவூர் அணைக்கட்டு ஆகிய 3 அணைக்கட்டுகளும் சேதமடைந்த நிலையில் உள்ளது. வரும் வடகிழக்கு பருவமழை காலத்திற்குள் போர்க்கால அடிப்படையில் சீர்செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர் மோகன், இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.


Next Story