நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்


நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்
x

செய்யாறு ஒழுங்குமுறை விற்பனைகூடத்தில் நெல் கொள்முதல் செய்யப்படாததை கண்டித்து விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

செய்யாறு,

செய்யாறு ஒழுங்குமுறை விற்பனைகூடத்தில் நெல் கொள்முதல் செய்யப்படாததை கண்டித்து விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில், ஆற்காடு சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து, வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடம் எதிரே ஆற்காடு சாலையில் மறியல் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவலறிந்ததும் செய்யாறு துணைபோலீஸ் சூப்பிரண்டு செந்தில் தலைமையில் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவைத்தை நடத்தினர்.

அப்போது வேளாண் பொருட்களை இன்றே கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடைகள் ஏலத்திற்கு எதிர்ப்பு

ஒருங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் 10 கடைகள் கட்டப்பட்டுள்ளது.

இந்த கடைகளை வாடகைக்கு ஏலம் விடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த கடைகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்களை கொள்முதல் செய்யும் வியாபாரிகளுக்கு ஒதுக்க வேண்டும் எனவும், வெளி நபர்களுக்கு வழங்கக்கூடாது என கூறி, பொது ஏலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்யவில்லை என கூறப்படுகிறது.

இதனால் விவசாயிகள் கொண்டு வந்த சுமார் 3 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் காத்துக்கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.


Related Tags :
Next Story