கூட்டுறவு தொழிற்சாலையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்


கூட்டுறவு தொழிற்சாலையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
x

பிக்கட்டி தேயிலை தொழிற்சாலையில் தேயிலை கொள்முதலில் கோட்டா முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொழிற்சாலையை முற்றுைகயிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி

ஊட்டி,

பிக்கட்டி தேயிலை தொழிற்சாலையில் தேயிலை கொள்முதலில் கோட்டா முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொழிற்சாலையை முற்றுைகயிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேயிலை தொழிற்சாலை

மஞ்சூர் அருகே பிக்கட்டி உள்பட 16 இடங்களில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. பிக்கட்டி தொழிற்சாலையில் பிக்கட்டி, முள்ளிகூர், பாரதியார் நகர், கெரப்பாடு, குந்தா கோத்தகிரி, சிவசக்திநகர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களிடம் இருந்து தினமும் கொள்முதல் செய்யப்படும் பச்சை தேயிலையை கொண்டு, தொழிற்சாலையில் தேயிலைத்துாள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தநிலையில் கோடை மழை போதியளவு பெய்ததால் தேயிலை தோட்டங்கள் பசுமையாக காட்சி அளிக்கிறது. மேலும் பிக்கட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது. இதனால் கூட்டுறவு தொழிற்சாலைக்கு பச்சை தேயிலை வரத்து அதிகரித்து உள்ளது. இதையடுத்து கடந்த சில நாட்களாக விவசாயிகளிடம் இருந்து பச்சை தேயிலை கொள்முதல் செய்வதில் கோட்டா முறை அமல்படுத்தப்பட்டது.

முற்றுகை போராட்டம்

இதனால் விவசாயிகளிடம் இருந்து குறைந்த அளவில் பச்சை தேயிலை கொள்முதல் செய்யப்பட்டது. இதன் காரணமாக விவசாயிகள் தேயிலையை விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டனர். தேயிலை மகசூல் அதிகரித்து உள்ள நிலையில், தங்களிடம் இருந்து குறைந்த அளவு பச்சை ்தேயிலை கொள்முதல் செய்ததால் விவசாய உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பச்சை தேயிலை கொள்முதல் அளவு மேலும் குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் கோட்டா முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிக்கட்டி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைைய முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் தொழிற்சாலையின் நிர்வாக இயக்குனரை இடமாற்றம் செய்ய வேண்டும். பச்சை தேயிலை கொள்முதலை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நிர்வாகம் தரப்பில் சுமுக பேச்சுவார்தை நடத்தாவிட்டால், தொழிற்சாலைக்கு தேயிலை வினியோகிப்பது இல்லை என்று விவசாயிகள் முடிவு செய்து உள்ளனர்.


Next Story