மடிப்பிச்சை ஏந்தி விவசாயிகள் நூதன போராட்டம்


மடிப்பிச்சை ஏந்தி விவசாயிகள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 22 July 2023 1:15 AM IST (Updated: 22 July 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளிமந்தையம் அருகே மடிப்பிச்சை ஏந்தி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

கள்ளிமந்தையம் அருகே உள்ள தும்பிச்சிபாளையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 17-வது நாளாக நேற்று நடந்த போராட்டத்திற்கு திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வடிவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய பொறுப்பாளர் கோபால்சாமி முன்னிலை வகித்தார். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க திருப்பூர் மாவட்ட அமைப்பு செயலாளர் பாலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

இதையடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தரையில் மண்டியிட்டு மடிப்பிச்சை ஏந்தி கோஷமிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கள்ளிமந்தையம் பகுதியில் மின்சார வாரியம் சார்பில், உயர் மின்கோபுரம் அமைப்பதற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு மத்திய, மாநில அரசுகள் விலை நிர்ணயம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story