விவசாயிகள் நூதன முறையில் போராட்டம்


விவசாயிகள் நூதன முறையில் போராட்டம்
x
தினத்தந்தி 27 July 2022 5:16 PM IST (Updated: 27 July 2022 5:38 PM IST)
t-max-icont-min-icon

யூரியா வாங்க செல்லும்போது விவசாயிகளுக்கு ஏற்படும் இடையூறுகளை கண்டித்து விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

யூரியா வாங்க செல்லும்போது விவசாயிகளுக்கு ஏற்படும் இடையூறுகளை கண்டித்து விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உரக்கடைகளில் யூரியா வாங்க செல்லும் விவசாயிகள் இணை பொருட்கள் வாங்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதனால் c படும் துயரத்தை விளக்கும் வகையில் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்கம் மையம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

நிகழ்ச்சிக்கு விவசாய சங்க செயலாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு ஆடு, புலி போல் முக கவசம் அணிந்து கொண்டு அதிகாரிகளையும் உர வியாபாரிகளையும் கண்டித்து கோஷமிட்டனர்.




Next Story