விவசாயிகள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி


விவசாயிகள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி
x
தினத்தந்தி 9 April 2023 12:45 AM IST (Updated: 9 April 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது.

திருவாரூர்

காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடுவதாக அறிவித்ததை தொடர்ந்து மன்னார்குடி காந்தி சிலை அருகில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் பி.ஆர். பாண்டியன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அப்போது நிருபர்களுக்கு பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நிலக்கரி எடுக்க எதிர்ப்பு தெரிவித்து வடசேரி அருகே உள்ளிக்கோட்டையில் மத்திய அரசின் அரசாணை நகல் எரிப்பு போராட்டத்தை நடத்தினோம். முதல்-அமைச்சர் உடனடியாக பிரதமருக்கு கடிதம் எழுதி நிலக்கரி திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். இதுதொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பா.ஜனதா தலைவர் அண்ணாமலையும் நிலக்கரி துறை மந்திரி பிரகலாத் ஜோஷியை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். இந்த நிலையில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்து இருப்பதை வரவேற்கத்தக்கது. இது விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story