வயலில் இறங்கி கருப்புக்கொடியுடன்விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


வயலில் இறங்கி கருப்புக்கொடியுடன்விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

குத்தாலம் அருகே விளைநிலங்களை அழித்து புறவழிச்சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வயலில் இறங்கி கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

குத்தாலம்;

குத்தாலம் அருகே விளைநிலங்களை அழித்து புறவழிச்சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வயலில் இறங்கி கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புறவழிச்சாலை பணிகள்

மயிலாடுதுறை முதல் திருவாரூர் வரை சாலை அகலப்படுத்தும் பணி நெடுஞ்சாலைத்துறை சார்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூர் முதல் கழனிவாசல் இடையே புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன.வடக்கு, தெற்காக அமையும் இந்த புறவழிச்சாலை காரணமாக மேற்கிலிருந்து, கிழக்கு நோக்கி மழைக் காலங்களில் தண்ணீர் வடிவதற்கு சிரமம் ஏற்படும் என்றும், இதன் காரணமாக மேலமங்கநல்லூர், கழனிவாசல், வேலங்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்த 2000 ஏக்கர் விளை நிலங்கள் பருவமழை காலங்களில் நீரில் மூழ்கி விளைச்சல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என கூறி அப்பகுதி மக்கள் புறவழிச்சாலை பணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கருப்புக்கொடியுடன்....

இந்தநிலையில் கழனிவாசல் பகுதியை சேர்ந்த விவசாயிகள் புறவழிச்சாலை பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் புறவழிச் சாலையை முழுவதுமாக பாலமாக கட்டித் தர கேட்டும், சாலை அமைக்கும் பணியை கைவிட வலியுறுத்தியும் நேற்று வயலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதையொட்டி 100-க்கும் மேற்பட்ட மனுக்களை தோரணமாக கட்டி கையில் கருப்புக்கொடியுடன் வந்த விவசாயிகள் கழனிவாசல் வயல்வெளியில் இறங்கி புறவழிச்சாலை பணிக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.


Next Story