பருத்தி செடிகளை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம்


பருத்தி செடிகளை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம்
x

விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு வழங்க வலியுறுத்தி பருத்தி செடிகளை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சாவூர்

பாபநாசம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகம் முன்பு தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்துக்கு முன்னோடி விவசாயி மதகரம் ரகுபதி தலைமை தாங்கினார். ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் அணைக்குடி அய்யாரப்பன், உமையாள்புரம் ஆதிசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுவாமிமலை விமலநாதன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகையை முழுமையாக வழங்க வேண்டும். மத்திய அரசும், மாநில அரசும் பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து காலம் தாழ்த்தாமல் இழப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆா்ப்பாட்டத்தில் பாபநாசம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து விவசாயிகள் பருத்தி செடிகளை கையில் ஏந்தி கலந்து கொண்டனர்.முடிவில் பாபநாசம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் நன்றி கூறினார்.


Next Story