முக்காடு போட்டு விவசாயிகள் முற்றுகை போராட்டம்


முக்காடு போட்டு விவசாயிகள் முற்றுகை போராட்டம்
x

முக்காடு போட்டு விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

திருச்சி

பட்டா நிலம் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் ரூ.6 ஆயிரம் பென்சன் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதை கண்டித்தும், கோவில் நிலங்களில் சாகுபடி செய்பவர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன் வழங்க மறுப்பதை கண்டித்தும், வாழை விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தலையில் முக்காடு போட்டு கோஷங்களையும் எழுப்பினார்கள். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஒருசில விவசாயிகளை மட்டும் கலெக்டரிடம் மனு அளிக்க அழைத்து சென்றனர். இதையடுத்து கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டர் பிரதீப்குமாரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். விவசாயிகளின் போராட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.


Next Story