இடுபொருட்கள் வழங்குவதில் குளறுபடி உள்ளதாக கூறி சாலை மறியல்
கூத்தாநல்லூர் அருகே மானிய விலையில் இடுபொருட்கள் வழங்குவதில் குளறுபடி உள்ளமதக கூறி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கூத்தாநல்லூர்,
கூத்தாநல்லூர் அருகே மானிய விலையில் இடுபொருட்கள் வழங்குவதில் குளறுபடி உள்ளமதக கூறி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சாலை மறியல்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள, பண்டுதக்குடியில், வேளாண்மை துணை விரிவாக்க மையம் உள்ளது. இந்த மையத்தில் விவசாயிகளுக்கு விதை நெல் மற்றும் உரம் போன்ற விவசாய இடுபொருட்களில் சில மானிய விலையில் வழங்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். இந்த நிலையில், உரம் போன்ற இடுபொருட்கள் சில மானிய விலையில் வழங்குவதில் குளறுபடிகள் இருப்பதாக கூறி, அப்பகுதி விவசாயிகள் சிலர் நேற்று பண்டுதக்குடியில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இது குறித்து தகவல் அறிந்ததும் கூத்தாநல்லூர் தாசில்தார் குருமூர்த்தி மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், உடன்பாடு ஏற்பட்டதால் சாலை மறியலை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் சாலையில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.