வயல்களில் மாட்டு கிடை அமைக்கும் விவசாயிகள்


வயல்களில் மாட்டு கிடை அமைக்கும் விவசாயிகள்
x

வயல்களில் மாட்டு கிடை அமைக்கும் விவசாயிகள்

திருவாரூர்

கொரடாச்சேரி

கொரடாச்சேரி ஒன்றியத்தில் வயல்களில் விவசாயிகள் மாட்டு கிடை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பா சாகுபடி பணிகள்

காவிரி டெல்டா பகுதிகளில் சம்பா சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முன்கூட்டியே திறக்கப்பட்ட மேட்டூர் அணையால் கடைமடை பகுதிகள் வரை தண்ணீர் பாய்ந்து அனைத்து வயல் வெளிகளிலும் விவசாயம் செய்வதற்கான ஏற்ற சூழல் அமைந்துள்ளது. இதனால் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர். விவசாயத்திற்கு முன்னோட்டமாக விலை நிலங்களின் மண் தரத்தினை மேம்பாடு செய்யும் நடவடிக்கைகளில் விவசாயிகள் கவனம் செலுத்துகின்றனர்.

மண் தரம் மேம்பாடு செய்யும் பணி

பொதுவாக விவசாயம் தொடங்குவதற்கு முன்பு கால்நடை கழிவுகளைக் கொண்டு வயல்வெளிகளில் பரப்பியும், புல் பூண்டு தாவரங்களை வளர்த்து அதை மண்ணில் மக்கச் செய்து மண்ணின் தரத்தை மேம்படுத்துவதும் வழக்கம். அதன் ஒரு பகுதியாக வயல்களில் மாடுகள் கிடை அமைத்து மண் தரம் மேம்பாடு செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது மாடுகள் வெளியேற்றும் சாணம், சிறுநீர் உள்ளிட்ட கழிவுகளை வயல்களிலேயே சேமித்து, அதனை வயல் முழுவதும் பரப்புகின்றனர். இதன் மூலம் மண்ணின் தரம் மேம்பாடு அடைந்து விளைச்சல் அதிகரிக்கும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

இந்த ஆண்டு விவசாயத்திற்கு ஏற்ற சாதகமான சூழல் இருப்பதால் கூடுதல் மகசூல் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு விவசாயிகள் ஆர்வமாக இந்த பணிகளில் இறங்கியுள்ளனர்.


Next Story