விவசாயிகள் சங்க கூட்டம்


விவசாயிகள் சங்க கூட்டம்
x

விவசாயிகள் சங்க கூட்டம் நடந்தது.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட குழு கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கூட்டத்திற்கு வேப்பந்தட்டை வட்ட குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டு சங்கத்தின் வளர்ச்சி குறித்து பேசினார். கூட்டத்தில் காரியானூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளுவாடி, பாரதிநகர், சோலை நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து வேப்பந்தட்டை வட்டக்குழு புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.


Next Story