விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

மயிலாடுதுறையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்

மயிலாடுதுறை

காவிரி டெல்டா மாவட்டங்களில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டங்களை முழுமையாக அமல்படுத்த கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிம்சன் தலைமை தாங்கினார். செயலாளர் துரைராஜ், பொருளாளர் செல்லப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செயலாளர் சாமி.நடராஜன் கலந்து கொண்டு பேசினார். காவிரி டெல்டா மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும். கைவிடப்பட்ட எண்ணெய் கிணறுகளில் மீண்டும் எரிவாயு எடுக்க அனுமதிக்க கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் டெல்டா பாசனதாரர் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன், வீரசோழன் விவசாய சங்க முன்னேற்ற சங்க தலைவர் வாணிதாஸ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின், நிலம்-நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story