விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்

திருமருகல் பஸ் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், ஒன்றிய தலைவர் மாசிலாமணி, ஒன்றிய துணைத்தலைவர் தியாகராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாபுஜி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நில ஒருங்கிணைப்பு மசோதாவை திரும்ப பெற வேண்டும், செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகத்தை நிறுத்த வேண்டும், தமிழ்நாடு அரசு அறிவித்த உளுந்து, பயறு நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட பருத்திக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், குறுவை சாகுபடி செய்ய விதை, உரம் தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அதேபோல் வேதாரண்யம் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவகுருபாண்டியன், மாவட்ட நிர்வாகக்குழு நாராயணன், ஒன்றிய துணைச் செயலாளர் பாலகுரு, பொருளாளா் முருகானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story