விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்

நாகை புதிய பஸ் நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய தலைவர் சேவியர் ஆகியோர் தலைமை தாங்கினார். மாவட்டத்தலைவர் சரபோஜி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நில ஒருங்கிணைப்பு மசோதாவை திரும்ப பெற வேண்டும்.

பொது வினியோகத்திட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகத்தை நிறுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு அறிவித்த உளுந்து, பயறு நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும். பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள பருத்தி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குறுவை சாகுபடி செய்ய குறித்த காலத்தில் விதை உரம் தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும். கோடை சாகுபடிக்கு உழவு மானியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்


Next Story