100 நாள் வேலை கேட்டு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலை கேட்டு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
100 நாள் வேலை கேட்டு தமிழ்நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பாக தோகைமலை ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய சங்க ஒன்றிய செயலாளர் முனியப்பன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சங்கப்பிள்ளை ஆகியோர் தலைமை தாங்கினர். கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பெருமாள் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக விவசாய சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல், தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொது குழு உறுப்பினர் சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும், சம கூலியாக ரூ.273 குறையாமல் வழங்க வேண்டும், 100 நாள் வேலையை மாவட்ட நிர்வாகமே வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதில் கல்லடை, தோகைமலை, கழுகூர், பொருந்தலூர் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.