விவசாய சங்கத்தினர் தேங்காய் உடைத்து போராட்டம்


விவசாய சங்கத்தினர் தேங்காய் உடைத்து போராட்டம்
x
தினத்தந்தி 27 May 2023 12:15 AM IST (Updated: 27 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விவசாய சங்கத்தினர் தேங்காய் உடைத்து போராட்டம்

கன்னியாகுமரி

களியக்காவிளை:

மேல்புறம் வேளாண்மை விரிவாக்க மையத்தின் முன்பு விவசாய சங்கத்தினர் தேங்காய் உடைக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தென்னை மரங்களில் ஏற்பட்டுள்ள பல்வகை நோய்களை போக்க வேண்டும். தென்னை மரம் ஏற நவீன கருவிகளை மானிய விலையில் வழங்க வேண்டும். தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க அரசு கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும். நியாயவிலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்ய வேண்டும். மானிய விலையில் தென்னங்கன்றுகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தென்னை விவசாய சங்க மாவட்ட செயலர் வின்சென்ட் தலைமை தாங்கினார். அமைப்பின் மாவட்ட தலைவர் என்.முருகேசன் உள்ளிட்டோர் போராட்டம் குறித்து விளக்கி பேசினர். அப்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் தேங்காய்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் நிறைவில் வட்டார வேளாண்மை அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அப்பகுதியில் தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story