முதிர்ந்த முருங்கை கிளைகளை வெட்டி விட்ட விவசாயிகள்


முதிர்ந்த முருங்கை கிளைகளை வெட்டி விட்ட விவசாயிகள்
x
தினத்தந்தி 12 Dec 2022 12:15 AM IST (Updated: 12 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடி பகுதியில் மகசூல் அதிகரிக்க முதிர்ந்த முருங்கை கிளைகளை விவசாயிகள் வெட்டி விட்டனர்.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி வட்டார பகுதிக்கு உட்பட்ட உதிரமாடன் குடியிருப்பு, மெய்யூர், கந்தபுரம், நேசபுரம், கொட்டங்காடு, வேதகோட்டைவிளை, ஞானியார்குடியிருப்பு, தாண்டவன் காடு, மாதவன்குறிச்சி, தாங்கையூர் போன்ற செம்மணல் பகுதியில் தற்போது முழு மூச்சுடன் முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. ஏராளமான பனை, தென்னை மரத்தோட்டங்களில் முருங்கையை ஊடுபயிராக விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் தற்போது மழை காலத்தையொட்டி முதிர்ந்த முருங்கை மரத்தில் உள்ள கிளைகளை வெட்டி விட்டு வளர்த்தால் நல்ல மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் தாங்கள் முருங்கை மரங்களின் கிளைகளை வெட்டி விட்டுள்ளனர். பல இடங்களில் புதிதாக முருங்கை கம்புகளை நடவு செய்துள்ளனர்.


Next Story