விவசாயிகள், தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள், தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

விவசாயிகள், தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

திருச்சி

விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு கொள்முதல் செய்யும் நிதியை குறைத்தது, குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யாதது, 100 நாட்கள் வேலைக்கு நிதியை குறைத்தது என்று மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர்கள் கே.சி.பாண்டியன், சிதம்பரம் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர்கள் நடராஜன், பழனிசாமி, கார்த்திகேபயன், ராஜேஷ்கண்ணா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் திரளான விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story