விவசாயிகளுக்கு விரைவு மின் இணைப்பு
திருப்பத்தூர் அருகே விவசாயிகளுக்கு விரைவு மின் இணைப்பு வழங்கப்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் கோட்டம், பேராம்பட்டு மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட சிம்மணபுதூர் பகுதியில் விவசாய விரைவு மின் இணைப்புக்காக புதிய டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டு அதனை பயன்பாட்டுக்கொண்டு வந்து விவசாயிகளுக்கு மின்இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ரா.ராமலிங்கம் தலைமை தாங்கி, பெண் விவசாயி கலைவாணி என்பவருக்கு விரைவு மின்இணைப்பை வழங்கி பேசினார். கோட்ட பொறியாளர் அருள்பாண்டியன் முன்னிலை வகித்தார். இதில் உதவி செயற்பொறியாளர் ச.ராஜப்பன், உதவி பொறியாளர் க.ர.பிரேமாவதி மற்றும் மின்வாரிய பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story