காங்கயம் அருகே திட்டுப்பாறை பகுதியில் கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் திட்டத்தை கைவிட கோரி கீழ்ப்பவானி விவசாயிகள் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.


காங்கயம் அருகே திட்டுப்பாறை பகுதியில் கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் திட்டத்தை கைவிட கோரி கீழ்ப்பவானி விவசாயிகள் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
x

கீழ்ப்பவானி விவசாயிகள் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்

காங்கயம்,

காங்கயம் அருகே திட்டுப்பாறை பகுதியில் கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் திட்டத்தை கைவிட கோரி கீழ்ப்பவானி விவசாயிகள் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கீழ்பவானி வாய்க்கால்

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து கடைமடை பகுதியான கரூர் மாவட்டம் அஞ்சூர் கிராம ஊராட்சி வரை உள்ள கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. இதற்காக ரூ.710 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைத்தால் இருபுறமும் உள்ள பல லட்சம் மரங்கள் வெட்டப்பட்டு, அங்கு வசிக்கும் பல்வேறு பறவை இனங்கள் அழிந்து விடும். மேலும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும், விவசாய பணிகள் முற்றிலும் தடைபடும் என்று கீழ் பவானி பாசன விவசாயிகள் இந்த திட்டத்தை ரத்து செய்யக் கோரி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி பாசன விவசாயிகள், குடிநீர் பயனாளிகள், கீழ் பவானி பாசன பாதுகாப்பு இயக்கம், விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று காலை காங்கயம் அருகே உள்ள திட்டுப்பாறை பகுதியில் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கீழ் பவானி பாசன விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் ஏ.கே.எஸ்.சுப்பிரமணி தலைமை தாங்கினார். சங்கத்தின் தலைவர் செ.நல்லசாமி முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-

சம்பா சாகுபடி

பாசன கால்வாய்கள் 65 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படவில்லை. தூர்வாரினால் நீர் நிர்வாகம் மேம்படும். கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.

கீழ் பவாணி அணை நீர் சம்பா சாகுபடிக்கு மட்டுமே திறக்கப்பட வேண்டும். கோடையிலும் குருவை பருவத்திலும் திறந்துவிடக்கூடாது. காவிரித் தீர்ப்பு நடைமுறைக்கு வந்திருப்பதால் நடப்பு ஆண்டிலும் பின்பும் இது பின்பற்ற படவேண்டும்.

கீழ் பவானி தலைமை கால்வாயின் கொள்ளளவு வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடியாகும். வினாடிக்கு 5 ஆயிரம் என்ற அளவில் எடுக்கும் விதத்தில் மாற்றியமைத்தால் மட்டுமே 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் முழுமைக்கும் ஒரே நேரத்தில் நீர் விட முடியும். அணை நீர் பயன்பாடு இல்லாமல் கடலில் வடிவதை இதனால் குறைக்கவும், தடுக்கவும் முடியும். தலைமை கணவாயின் இடது கரையை வலுப்படுத்தி அகலப்படுத்தி அதில் தார்ச்சாலை அமைத்தால், அது போக்குவரத்திற்கும், கால்வாய் கண்காணிப்பிற்கும், பராமரிப்பிற்கும் வசதியாக இருக்கும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பாசன விவசாயிகள், குடிநீர் பயனாளிகள், கீழ் பவானி பாசன பாதுகாப்பு இயக்கம், விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, பொதுமக்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story