மாற்றுத்திறன் மாணவர்களின் சிறப்பு பயிற்சியாளர்கள் உண்ணாவிரதம்


மாற்றுத்திறன் மாணவர்களின் சிறப்பு பயிற்சியாளர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 6 Dec 2022 12:15 AM IST (Updated: 6 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊதிய உயர்வு கோரி மாற்றுத்திறன் மாணவர்களின் சிறப்பு பயிற்சியாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்

தென்காசி

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் சங்கம் சார்பில், ஊதிய உயர்வு கோரி தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது. முன்னதாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தங்களது கோரிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக பள்ளிகளில் படிக்கும் 1.3 லட்சம் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வழியாக சிறப்பு பயிற்றுனர்களாக பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு கடந்த 2018-ம் கல்வி ஆண்டுக்கு பிறகு ஊதியம் உயர்த்தப்படவில்லை. ஆனால் பள்ளிக் கல்வியில் பணி புரியும் இதர அனைத்து நிலை பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு, போக்குவரத்து படி உயர்த்தப்பட்டு தற்போது மீண்டும் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களுக்கு ஒரு முறை கூட ஊதியம் உயர்த்தப்படவில்லை.

எனவே எங்களுக்கு அரசின் பணி ஆணை வழங்கி குறைந்தபட்சம் ரூ.35 ஆயிரத்துக்கு மேல் ஊதியம் கிடைக்க வழிவகை செய்ய கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் குருசாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தினகரன், பொருளாளர் கருணாகரன், மாவட்ட துணைத் தலைவர் மதுரவாணி, துணை செயலாளர் சிந்துஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரதம் காலையில் தொடங்கி மாலையில் முடிவடைந்தது.


Next Story