காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்
தர்மபுரியில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தை மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான தீர்த்தராமன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் பாலகிருஷ்ணன், இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் அர்த்தனாரி வரவேற்று பேசினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கலைச்செல்வம், மாவட்ட பொருளாளர் வடிவேல், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் காளியம்மாள் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் உண்ணாவிரத போராட்டத்தை வாழ்த்தி பேசினர். இந்த போராட்டத்தின் போது ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் வட்டார தலைவர்கள் வேலன், வஜ்ஜிரம், ராஜேந்திரன், மணி, ஞானசேகர், பெரியசாமி, ராஜேந்திரன், சிலம்பரசன், காமராஜ், சந்திரசேகரன், வெங்கடாசலம், சிறுபான்மை பிரிவு தலைவர் முபாரக், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் தீபன்குமார், ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட தலைவர் சிவலிங்கம், எஸ்.சி.-எஸ்.டி. பிரிவு மாநில பொதுச்செயலாளர் ராமசுந்தரம், மாவட்ட தலைவர் சம்பத்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட துணைத்தலைவர் ஜெயபிரகாசம் பழரசம் கொடுத்து உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார். முடிவில் நகர தலைவர் வேடியப்பன் நன்றி கூறினார்.