சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம்


சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம்
x

வளையப்பட்டியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

நாமக்கல்

மோகனூர்

நாமக்கல் மாவட்டத்தில் சிப்காட் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மோகனூர் தாலுகாவில் என்.புதுப்பட்டி, வளையப்பட்டி, அரூர், பரளி, லத்துவாடி ஆகிய பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடங்களில் சிப்காட் அமைக்க அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உள்ளனர். இப்பகுதியில் அதிக அளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. அதனால் இந்த பகுதிகளில் சிப்காட் அமைந்தால் சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், விளை நிலங்கள் பாதிக்கப்படும். இந்த திட்டத்துக்கு அப்பகுதி விவசாயிகள், சிப்காட் எதிர்ப்பு குழுவினர் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு, அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று வளையப்பட்டியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். வளையப்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வீரமலை, சிப்காட் எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரத போராட்டத்தில் கொ.ம.தே.க. கிழக்கு ஒன்றிய தலைவர் முருகேசன், செயலாளர் சிவக்குமார், கம்யூனிஸ்டு நிர்வாகிகள் கருணாநிதி, தங்கரத்தினம், சதாசிவம், பா.ஜ.க.மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டு சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.


Next Story