காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம்
சோளிங்கரில் காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஸ் நிலையம் காமராஜர் சிலை அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணா விரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு நகர தலைவர் டி.கோபால் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர்கள் கார்த்தி, செல்வம், உதயகுமார், நந்தகுமார், அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் கலந்துகொண்டு ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம்செய்யப்பட்டதை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் பேசினார். மாவட்ட செயலாளர் கல்பனா, மாநில எஸ்.சி., எஸ்.டி. பிரிவு துணைத் தலைவர் மணிவேலு, வழக்கறிஞர் ரகுராம்ராஜூ உள்பட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story