அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி உண்ணாவிரதம்


அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி  உண்ணாவிரதம்
x

சேதுபாவாசத்திரம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது.

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம்:

சேதுபாவாசத்திரம் அருகே மரக்காவலசை ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மரக்காவலசை, கழுமங்குடா, காரங்குடா, கிளைகள் சார்பில், பூக்கொல்லையில் உள்ள சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு, ஒன்றியக்குழு உறுப்பினர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயற்குழு உறுப்பினர் மனோகரன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் வக்கீல் வீ.கருப்பையா, பி.சேகர், பி.பெரியண்ணன், அகிலன், கர்த்தர், சீனிவாசன், இளங்கோவன், செந்தில்குமார், நவநீதம், ஜாக்குலின் மேரி, ஜகுபர்அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சடையப்பன், குருவிக்கரம்பை சரக வருவாய் ஆய்வாளர் வெற்றிச்செல்வி, கிராம நிர்வாக அலுவலர்கள் மகாலட்சுமி, செந்தில்குமார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்வாகீசுவரன், ஊராட்சி மன்றத் தலைவர் நிரஞ்சனா சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து உடனடியாக மின் இணைப்பு பெற ஏதுவாக மரக்காவலசையைச் சார்ந்த 4 பேருக்கு வீட்டு வரி ரசீது வழங்கப்பட்டது. மற்ற கோரிக்கைகள் குறித்து விரைவில் தாசில்தார் தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story