சென்னிமலை அருகே விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் சாவு
சென்னிமலை அருகே விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் சாவு
சென்னிமலை
சென்னிமலை அருகே அம்மாபாளையம் காந்திஜி வீதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 56). இவர் தனியார் பிஸ்கெட் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று மூர்த்தி திருப்பூர் மாவட்டம் காங்ேகயம் அருகே உள்ள பாப்பினி கிராமத்தில் நடந்த ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தனது மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது சென்னிமலை - காங்கேயம் ரோட்டில் கணுவாய் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த ஆட்டோவும், மூர்த்தியின் மொபட்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் மொபட்டில் இருந்து மூர்த்தி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மூர்த்தி பரிதாபமாக இறந்து விட்டார். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.