சத்தியமங்கலம் அருகே மோட்டார்சைக்கிளில் சென்ற 2 பேர் வாய்க்காலில் தவறி விழுந்தனர்- ஒருவர் உடல் மீட்பு; மற்றொருவரை தேடும்பணி தீவிரம்


சத்தியமங்கலம் அருகே மோட்டார்சைக்கிளில் சென்ற 2 பேர் வாய்க்காலில் தவறி விழுந்தனர்- ஒருவர் உடல் மீட்பு; மற்றொருவரை தேடும்பணி தீவிரம்
x

சத்தியமங்கலம் அருகே மோட்டார்சைக்கிளில் சென்ற 2 பேர் வாய்க்காலில் தவறி விழுந்தனர். இதில் ஒருவர் உடல் மீட்கப்பட்டது. மற்றொருவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே மோட்டார்சைக்கிளில் சென்ற 2 பேர் வாய்க்காலில் தவறி விழுந்தனர். இதில் ஒருவர் உடல் மீட்கப்பட்டது. மற்றொருவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

வாய்க்காலில் தவறி விழுந்தனர்

சத்தியமங்கலத்தை அடுத்த புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள அரசாணை மொக்கை என்ற பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 31). இவர் மில் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் கேசவராஜ் (32). இவர் பனையம்பள்ளி பால் கூட்டுறவு நிறுவனத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். கேசவராஜும், மோகனும் நண்பர்கள் ஆவர்.

இந்த நிலையில் கேசவராஜும், மோகனும் மோட்டார்சைக்கிளில் பனையம்பள்ளியில் இருந்து மேட்டுக்கடை மாரனூர் கீழ்பவானி வாய்க்கால் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி வாய்க்காலில் விழுந்தது. வாய்க்காலில் அதிக அளவு தண்ணீர் சென்றதால் 2 பேரும் மூழ்கினார்கள்.

ஒருவர் உடல் மீட்பு

இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனே இதுபற்றி சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் வாய்க்காலில் இறங்கி கேசவராைஜயும், மோகனையும் தேடி பார்த்தார்கள். சிறிது நேர போராட்டத்துக்கு பிறகு மோகன் அவர் விழுந்த இடத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

தேடும் பணி தீவிரம்

தொடர்ந்து கேசவராஜை தேடும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர் மற்றும் தாசில்தாரும் வந்து தேடும் பணியை முடுக்கிவிட்டனர்.

இரவு வரை தேடியும் கேசவராஜ் கிடைக்கவில்லை. இருள் சூழ்ந்ததால் தேடும் பணி கைவிடப்பட்டது. அவரது கதி என்ன? என்று தெரியவில்லை. இதைத்தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) 2-வது நாளாக கேசவராஜை தேடும் பணி நடக்கிறது.


Next Story