நசியனூர் அருகே கார்- மோட்டார் சைக்கிள் மோதல்; அண்ணன்- தங்கை பலி
நசியனூர் அருகே கார், மோட்டார்சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் அண்ணன், தங்கை பலி ஆகினர்.
பவானி
நசியனூர் அருகே கார், மோட்டார்சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் அண்ணன், தங்கை பலி ஆகினர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவில் பூசாரி
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த நசியனூர் சாமிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் முத்து என்கிற பூரணசாமி (வயது 58). சமையல் தொழிலாளி. மேலும் இவர் கோவில் பூசாரியாகவும் இருந்து வந்தார். இவருடைய தங்கை புஷ்பா (49). நேற்று காலை அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு பூஜை செய்வதற்காக மோட்டார்சைக்கிளில் பூரணசாமி சென்றார். அவருடன், மோட்டார்சைக்கிளில் தங்கை புஷ்பாவும் சென்றார்.
சாவு
நசியனூரில் இருந்து சாமிக்கவுண்டன்பாளையம் செல்வதற்காக சேலம்- கோவை தேசிய நெடு்ஞ்சாலையை மோட்டார்சைக்கிளில் பூரணசாமி கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரும், மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து பூரணசாமியும், புஷ்பாவும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுபற்றி அறிந்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.