சரக்கு ஆட்டோ மோதி தொழிலாளி சாவு


சரக்கு ஆட்டோ மோதி தொழிலாளி சாவு
x

சரக்கு ஆட்டோ மோதி தொழிலாளி சாவு

ஈரோடு

சிவகிரி

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள நல்லப்ப நாயக்கன்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 51). இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊரான நல்லப்பநாயக்கன்பட்டிக்கு சென்றார்.

இந்தநிலையில் வேலைக்கு செல்வதற்காக நேற்று ஊரில் இருந்து திருப்பூருக்கு மோட்டார்சைக்கிளில் புறப்பட்டார். காலை 7 மணி அளவில் ஈரோடு மாவட்டம் சிவகிரியை அடுத்த அருகே சென்றபோது எதிரே வந்த சரக்கு ஆட்டோவும், மோட்டார்சைக்கிளும் கண்இமைக்கும் நேரத்தில் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ராஜேந்திரன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் சிவகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு ெசன்று, ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். விபத்து நடந்ததும் சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்தவர் அங்கிருந்து ஓடிவிட்டார். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

விபத்தில் இறந்த ராஜேந்திரனுக்கு பிரேமாதேவி (38) என்ற மனைவியும், 2 பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.


Next Story