தந்தை- மகனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை


தந்தை- மகனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை
x

பாபநாசத்தில் பெண்ணை தாக்கிய தந்தை- மகனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தஞ்சாவூர்

பாபநாசம்;

பாபநாசம் தாலுகா பண்டாரவாடை பார்வதிபுரம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வமேரி(வயது40). சம்பவத்தன்று செல்வமேரி வீட்டு முன்பு தீ வைத்து எரிக்கப்பட்ட பழைய துணிகளை யாரோ போட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் செல்வமேரி அவர்களை திட்டிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகில் குடியிருந்து வந்த அந்தோணிதாஸ்(48), அவரது மகன் அர்விஸ்( 18) ஆகிய இருவரும் சேர்ந்து செல்வ மேரியை தாக்கினர். இதனை தடுக்க வந்த செல்வகுமாரி மகன் ஸ்டாலின் மற்றும் உறவினர் சார்லஸ் ஆகியோரும் காயமடைந்தனர். இதுகுறித்து செல்வமேரி கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணி தாஸ், அர்விஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை பாபநாசம் கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் நேற்று தீ்ர்ப்பு கூறப்பட்டது. இதில் பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் அப்துல் கனி குற்றம் சாட்டப்பட்ட, அந்தோணி தாஸ், அவரது மகன் அர்விஸ் ஆகிய இருவருக்கும் 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அர்விசுக்கு ரூ.1,500- ம், அந்தோணிதாசுக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story