அயோத்தியாப்பட்டணம் அருகே மதுபோதையில் மகள்களுக்கு பாலியல் தொந்தரவு-தந்தை போக்சோவில் கைது


அயோத்தியாப்பட்டணம் அருகே மதுபோதையில் மகள்களுக்கு பாலியல் தொந்தரவு-தந்தை போக்சோவில் கைது
x
தினத்தந்தி 31 March 2023 3:37 AM IST (Updated: 31 March 2023 3:44 AM IST)
t-max-icont-min-icon

அயோத்தியாப்பட்டணம் அருகே மதுபோதையில் மகள்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

சேலம்

அயோத்தியாப்பட்டணம்:

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் பகுதியை சேர்ந்த 40 வயதான தொழிலாளி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மனைவியை பிரிந்து வாழ்வதால் மகனை மனைவியுடன் அனுப்பி விட்டார். மகள்களை மட்டும் தன்னுடன் வைத்துக் கொண்டார் அந்த தொழிலாளி. அவர் மகள்களில் மூத்தவளுக்கு 9 வயதும், இளையவளுக்கு 4 வயதும் ஆகிறது. மதுபோதையில் வீட்டுக்கு வரும் அந்த தொழிலாளி, இரவு நேரத்தில் மகள்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த சிறுமிகளின் பாட்டி கொடுத்த புகாரின் பேரில் காரிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி அந்த தொழிலாளி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


Next Story