சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது


சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது
x

அருப்புக்கோட்டையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையையும், இதற்கு உடந்தையாக இருந்த தாயையும் போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,


அருப்புக்கோட்டையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையையும், இதற்கு உடந்தையாக இருந்த தாயையும் போலீசார் கைது செய்தனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த தம்பதியரின் 14 வயது மகள் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்த அந்த சிறுமியை பெற்றோர் திடீெரன நெல்லையில் உள்ள ஒரு காப்பகத்தில் சேர்த்தனர்.

எதற்காக நெல்லைக்கு அழைத்து வந்து சிறுமியை காப்பகத்தில் சேர்த்தார்கள்? என்ற சந்தேகம் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு எழுந்தது. இதையடுத்து அந்த சிறுமியிடம் விசாரித்தனர்.

தந்தை, தாய் கைது

அப்போது அந்த சிறுமி, "நான் வீட்டில் இருக்கும்போது எனது தந்தை எனக்கு பாலியல் தொந்தரவு செய்தார். அதற்கு எனது தாயும் உடந்தையாக இருந்தார். பல முறை அவர் என்னை மிரட்டி பாலியல் தொல்லை அளித்துள்ளார். இந்தநிலையில் திடீரென எனது படிப்பை நிறுத்திவிட்டு அங்கிருந்து இங்கு வந்து சேர்த்துவிட்டனர்" என கூறியுள்ளார்.

இதையடுத்து காப்பக நிர்வாகிகள், விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பிற்கு தகவல் தெரிவித்தனர். அந்த சிறுமியை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை குறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி, அந்த சிறுமியின் தந்தையையும், தாயையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


Related Tags :
Next Story