மகன் கண்டித்ததால் தந்தை தற்கொலை


மகன் கண்டித்ததால் தந்தை தற்கொலை
x

வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்ததை மகன் கண்டித்ததால் தந்தை தற்கொலை செய்துகொண்டாா்.

விழுப்புரம்

செஞ்சி:

விழுப்புரம் அருகே உள்ள அன்னியூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது 76). இவருக்கு, அதே ஊரில் உள்ள வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால், அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இது பற்றி அறிந்ததும் அவரது மகன் சக்தி நாராயணன் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த லட்சுமணன் இன்று காலை மாட்டுக் கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் கஞ்சனூர் போலீசார் விரைந்து சென்று லட்சுமணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சக்தி நாராயணன் கொடுத்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story