கன்னியாகுமரியில் வேலைக்கு செல்லாததை கண்டித்த தந்தைக்கு கத்திக்குத்து ;வாலிபர் தலைமறைவு

கன்னியாகுமரியில் வேலைக்கு செல்லாததை கண்டித்த தந்தைக்கு கத்திக்குத்து ;வாலிபர் தலைமறைவு
x

கன்னியாகுமரியில் வேலைக்கு செல்லாததை கண்டித்த தந்தையை கத்தியால் குத்திய வாலிபர் தலைமறைவானார்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் வேலைக்கு செல்லாததை கண்டித்த தந்தையை கத்தியால் குத்திய வாலிபர் தலைமறைவானார்.

கத்திக்குத்து

கன்னியாகுமரி அருகே தெற்கு குண்டல் பகுதியை சேர்ந்த புகைப்பட கலைஞருக்கு 45 வயது ஆகிறது. இவருக்கு 18 வயதில் மகன் உள்ளார். இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை தந்தை கண்டித்துள்ளார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று இதுதொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வாலிபர், தந்தை என்றும் பாராமல் அவரை கத்தியால் குத்தி விட்டார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தையை குத்திய மகனை தேடிவருகின்றனர்.

Next Story