பரிசுத்த பேதுருவின் ஆலய பிரதிஷ்டை பண்டிகை


பரிசுத்த பேதுருவின் ஆலய பிரதிஷ்டை பண்டிகை
x

இட்டமொழி புதூர் பரிசுத்த பேதுருவின் ஆலய பிரதிஷ்டை பண்டிகை நடைபெற்றது.

திருநெல்வேலி

இட்டமொழி:

இட்டமொழி புதூர் பரிசுத்த பேதுருவின் ஆலய 48-வது பிரதிஷ்டை பண்டிகை மற்றும் அசன விழா 5 நாட்கள் நடைபெற்றது. முதல் 2 நாட்கள் சிவகாசி கோரேஸ் டி.இம்மானுவேல் கன்வென்ஷன் செய்தி அளித்தார். 3-ம் நாள் பெண்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாளையங்கோட்டை இவாஞ்சலின் லயனல் பேசினார். மதியம் வேதபாடத் தேர்வு, விளையாட்டு போட்டிகள், இரவு ஐ.எம்.எஸ். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 4-ம் நாள் அதிகாலை ஆலய பிரதிஷ்டை பண்டிகை மற்றும் பரிசுத்த நற்கருணை ஆராதனை, பரப்பாடி கிழக்கு சேகரகுரு அகஸ்டின் தேவசெய்தி அளித்தார். அதனை தொடர்ந்து பரிசுத்த ஞானஸ்நான ஆராதனை நடைபெற்றது. பின்னர் நெல்லை திருமண்டல பேராயர் ஏ.ஆர்.ஜி.எஸ்.டி. பர்னபாஸ் புதிய மிஷன் இல்லத்தை திறந்து வைத்தார். மதியம் தோத்திர பண்டிகை, காணிக்கை ஆராதனை நடைபெற்றது. இதில் திருமண்டல உபதலைவர் டி.பி.சுவாமிதாஸ், குருத்துவ காரியதரிசி டி.பாஸ்கர் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இரவு இம்மானுவேல் வாலிபர் ஐக்கிய சங்கம் சார்பில் திசையன்விளை எபி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை அசனம், கோடைகால விடுமுறை வேதாகம பள்ளி பாடசாலை மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சிகள், பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை சுவிசேஷபுரம் சேகர திருப்பணிவிடையாளர்கள் டி.வேதன்பு, ஜுடித் வேதன்பு, சபை ஊழியர் ஆல்வின் மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர்.


Next Story