சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டண உயர்வு


சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டண உயர்வு
x

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் இன்று (சனிக்கிழமை) முதல் வாகனங்களுக்கான சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் இன்று (சனிக்கிழமை) முதல் வாகனங்களுக்கான சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

சுங்க கட்டணம்

கிருஷ்ணகிரியில் பெங்களூரு தேசிய செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி இயங்கி வருகிறது. இந்த சுங்கச்சாவடி வழியாக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஓசூர், கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் வடமாநிலங்களுக்கு செல்கின்றன.

அதேபோல வடமாநிலங்களில் இருந்தும், பெங்களூரு, ஓசூரில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன. இந்த சுங்கச்சாவடியில் வாகனங்கள் சென்று வருவதற்கான கட்டணம் இன்று (சனிக்கிழமை) முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய கட்டணம் விவரம் வருமாறு (வாகனங்களுக்கான பழைய கட்டணம் அடைப்பு குறிப்புக்குள் காட்டப்பட்டுள்ளது) :-

ஒரு முறை

அதன்படி கார், ஜீப் வேன், இலகு ரக மோட்டார் வாகனம் ஒரு முறை பயணிக்க- ரூ.85 (80) ஒருநாளில் ஒரு முறை சென்று திரும்ப - ரூ.130 (120) மாதாந்திர கட்டண பாஸ் 50 தடவை பயணிக்க- ரூ.2,855 (2,715) வசூலிக்கப்படுகிறது.

அதேபோல இலகு ரக வணிக வாகனம், இலகு ரக சரக்கு வாகனம், சிற்றுந்து ஒரு முறை பயணிக்க- ரூ.140 (130), ஒருநாளில் ஒரு முறை சென்று திரும்ப - ரூ.205 (195) மாதாந்திர கட்டண பாஸ் 50 தடவை பயணிக்க-ரூ.4,610 (4,390)

மேலும் பஸ், டிரக் ஒரு முறை பயணிக்க- ரூ.290 (275), ஒருநாளில் ஒரு முறை சென்று திரும்ப- ரூ.435 (415), மாதாந்திர கட்டண பாஸ் 50 தடவை பயணிக்க - ரூ.9,660 (9,195) வசூலிக்கப்படுகிறது.

50 தடவை பயணிக்க

அதே போல கனரக கட்டுமான எந்திரம், மண் அள்ளும எந்திரம், பல்வை அச்சுகளை கொண்ட வாகனம் ஒரு முறை பயணிக்க - ரூ.455 (435), ஒருநாளில் ஒரு முறை சென்று திரும்ப - ரூ.680 (650), மாதாந்திர கட்டண பாஸ் 50 தடவை பயணிக்க- ரூ.15,150 (14,420) வசூலிக்கப்படுகிறது.

இதே போல மிகவும் பெரிய வாகனம், 7 அல்லது அதற்கு மேல் அச்சுகள் உள்ளது ஒரு முறை பயணிக்க- ரூ.555 (525) ஒருநாளில் ஒரு முறை சென்று திரும்ப- ரூ.830 (790), மாதாந்திர கட்டண பாஸ் 50 தடவை பயணிக்க- ரூ.18,440 (17,550) வசூலிக்கப்பட உள்ளது.


Next Story