தூக்கில் பெண் பிணம்
உளுந்தூர்பேட்டை அருகே தூக்கில் பெண் பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே கொரட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் அற்புதராஜ். இவரது மனைவி ஆரோக்கிய மேரி (வயது 27). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். அற்புதராஜ் அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் ஆரோக்கியமேரி நேற்று தனது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்த தகவலின் பேரில் திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆரோக்கியமோியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியமேரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.