அழுகிய நிலையில் பெண் பிணம்
வேலூர் அருகே அழுகிய நிலையில் பெண் பிணம்
வேலூர்
வேலூரை அடுத்த அன்பூண்டி தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையோரம் இன்று இரவு முட்புதரில் இருந்து துர்நாற்றம் வீசியது.
அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அருகில் சென்று பார்த்தபோது அங்கு ஒரு பெண்ணின் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது.
இதுகுறித்து அவர்கள் விரிஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் போலீசார் உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், அந்த பெண்ணிற்கு வயது சுமார் 30 இருக்கும். அவரது உடலில் எந்தவித காயங்களும் இல்லை. உடல் முழுவதும் அழுகி காணப்படுகிறது.
அவர் இறந்து 2 நாட்கள் ஆகியிருக்கலாம். அவரது உடல் அருகே டிபன்பாக்ஸ் கிடந்தது.
அவர் வேலைக்கு சென்றுவிட்டு நடந்து வரும் போது கால் தவறி புதரில் விழுந்து இறந்திருக்கலாம். அல்லது மயக்கமடைந்து கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்று கருதுகிறோம்.
அவரது சாவு குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். என்றனர்.