ஏரியில் பெண் பிணம்


ஏரியில் பெண் பிணம்
x

நாமக்கல் அருகே ஏரியில் பெண் பிணம் கிடந்தது.

நாமக்கல்

நாமக்கல் அருகே அலங்காநத்தம் அடுத்த பழையபாளையம் ஏரி உள்ளது. இங்கு நேற்று ஒரு பெண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாமக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் அங்கு பிணமாக மிதந்தவர் அலங்காநத்தை சேர்ந்த வரதராஜ் என்பவரின் மனைவி செல்லம்மாள் (வயது 68) என்பது தெரிய வந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story