அழுகிய நிலையில் பெண் பிணம்
கிருஷ்ணகிரி
ஓசூர்:-
ஓசூர் பார்வதி நகர் பகுதியில் ஒதுக்குப்புறமாக கழிப்பிடம் ஒன்று உள்ளது. அதன் அருகில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் ஒன்று கிடந்தது. அந்த பெண் இறந்து 3 அல்லது 4 நாட்கள் ஆகி இருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் தகவல் அறிந்த ஓசூர் போலீசார் விரைந்து சென்றனர். அழுகி கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இறந்தவர் யார் என்பதும் தெரியவில்லை.
இதுதொடர்பாக ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story