மலைப்பகுதியில் பெண் பிணம்


மலைப்பகுதியில் பெண் பிணம்
x

வந்தவாசி அருகே மலைப்பகுதியில் பெண் பிணமாக கிடந்தார். கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் உள்ள தவளகிரீஸ்வரர் மலைப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக வந்தவாசி தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தலைமையிலான வந்தவாசி தெற்கு போலீசார் அங்கு சென்று, பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிணமாக கிடந்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story